சென்னை: அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதனுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதால், சென்னையில் உள்ள அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஅதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தற்போது நத்தம் தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். இவருக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் நத்தம் விஸ்வநாதன். 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்ற இவர் தற்போது அதிமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருகிறார். இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட்டு 11,900 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.