சென்னை: பேரவையில் ஆளுநர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார் என சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தி யாளர்களை சந்தித்தபோது, சபாநாயகர் அப்பாவு மீது கடுமையாக குற்றச்சாட்டுக்களை கூறினர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இருந்து வருகிறார். இவர் எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, திமுக கூட்டணி கட்சியினருக்கும் முறையாக பேச வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. ஏற்கனவே திமுக கூட்டணி எம்எல்ஏ வேல்முருகன் சபாநாயகரிடம் தகராறில் ஈடுபட்ட நிலையில், அதிமுக சார்பில், சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், டாஸ்மாக் ரெய்டு குறித்து அதிமுகவினர், பேரவையில் விவாதிக்க கடந்த சில நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு சபாநாயகர் அப்பாவு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். இதுதொடர்பாக நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என பேட்ஜ் அணிந்து வந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இன்றும், கருப்பு உடை அணிந்து அதிமுகவினர் அவைக்கு வருகை தந்தனர்.
இனன்றைய அமர்விலும் சபாநாயகருடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், சட்டசபையில் அ.தி.மு.க.வினர் பேசுவதை திட்டமிட்டு நேரலை செய்ய மறுக்கிறார். சபாநாயகரே மரபை கடைபிடிக்கவில்லை என்றால் நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது? சபாநாயகர் சொல்வது எதுவும் உண்மையில்லை. மரபை மீறுகிறார் சபாநாயகர் என்று கூறினார்.
துரைமுருகன் – இதுபோன்ற விஷயம் இனி நடைபெறாது, எதிர்க்கட்சி தலைவர் இதனை இதோடு விட்டுவிடவும்.
சபாநாயகர் அப்பாவு – எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ். பேசுவது உண்மைக்கு புறம்பானது. எந்த பாகுபாகும் இல்லாமல் அனைவரும் பேசுவதை நேரலையில் காட்டி வருகிறோம் என்று கூறினார்.
சபாநாயகர், அவை முன்னவரின் விளக்கத்தில் திருப்தியில்லை என்று கூறி அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, ‘பேரவைத் தலைவர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார் என்று குற்றம் சாட்டியதுடன், அவையின் மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும், சொல்ல வேண்டுமானால், முதலில், எதிர்க்கட்சியான அதிமுகவுக்குதான் பேச வாய்ப்பு தர வேண்டும்.
ஆனால் சபாநாயகர் அப்பாவு விதிக்கு மாறாக, திமுக கூட்டணி கட்சியினருக்கு எல்லாம் வாய்ப்பு வழங்கி வருகிறார். அதேபோல, கூட்டணிக் கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசும்போது நேரலை செய்கிறார்கள். அதிமுக உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசும்போது நேரலை செய்வதில்லை. நேற்று விஜயபாஸ்கர் பேசும்போது நேரலை செய்யவில்லை.
நாங்கள் மக்கள் பிரச்னையைத்தான் பேரவையில் பேசுகிறோம். எங்களுக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? அவைத் தலைவர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வது ஏன்?’ என கேள்வி எழுப்பியயவர், சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பதாகக் கூறி அவையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தனர்.