சென்னை: எம்ஜிஆர் பாடியது போல தாயில்லைமல் நானில்லை என வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா என அதிமுக சார்பில் இன்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
இன்று உலகம் முழுக்க மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில், சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக சுமார் 76கிலோ அளவிலான பிரமாண்டமான கேக் வெட்டப்பட்டது. பின்னர் அந்த கேக்கை விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது.
முன்னதாக மகளிர்தின விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்னை மண்டல அதிமுக மகளிர்அணி மற்றும் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா புகைப்படத்தை வணங்கிவிட்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு சென்றார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு, மகளிர் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் மாலை அணிவித்து, வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவருக்கு வீரவாள் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 75 கிலோ எடையுள்ள கேக் வெட்டப்பட்டது. அந்த கேக்கை முன்னாள் அமைச்சர் வளர்மதி, எடப்பாடிக்கு வாயில் ஊட்டி மகிழ்ந்தார். பின்னர் அந்த கேக் விழாவில் பங்கேற்றவர்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பெண்களை அடிமையாக வைக்க நினைக்கும் ஆண்களின் எண்ணம் மாற வேண்டும் என குறிப்பிட்டார். ஒரு பெண் ஆளுமை எப்படி இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா என்றவர், . ஒரு பெண் முதல்வர் எப்படி ஆள வேண்டும் என முன் உதாரணமாக வாழ்ந்தவர் ஜெயலலிதா. ஒரு முதல்வர் எப்படி செயல்பட வேண்டும் என காட்டியவர் ஜெயலலிதா என கூறினார்.
தொடர்ந்து பேசியவர், தாயில்லைமல் நானில்லை. தானே எவரும் பிறந்ததில்லை என எம்ஜிஆர் பாடியது போல, ஒரு தாய் போல இருந்து கழகத்தை வழிநடத்தி தொண்டர்கள் மத்தியில் வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா என கூறி, நம்மை ஈன்ற தாய்க்கு பெருமை சேர்க்கும் வகையில் வாழ்வில் வாழ்ந்து காட்டுவோம் எனவும் கூறினார்.