சென்னை: மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனையோடு நிதி வழங்க மறுக்கிறது என பேரவையில் முதல்வர் ஸ்டாலின். காட்டமாக விமர்சித்தார். கடன் பற்றி பேச அ.தி.மு.க.வுக்கு தார்மீக உரிமை இல்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிதி தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுகஎம்எல்ஏகள், திமுக ஆட்சிக்குவந்த பிறகு, தமிழ்நாடு அரசின் கடன் பல மடங்கு உயர்ந்துள்ளதாக விமர்சித்தனர்.
இதற்கு பதில் அளித்து பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு , தமிழ்நாடு கடனில் தத்தளிப்பதாக கூறுவது தவறு. அ.தி.மு.க. விட்டுச்சென்ற கடனுக்கு 5 ஆண்டாக வட்டி மட்டும் ரூ.1.40 லட்சம் கோடி கட்டியுள்ளோம். அ.தி.மு.க. ஆட்சியில் 128 சதவீத அளவிற்கு கடன் அதிகரித்தது. நீங்கள் வாங்கிய கடனுக்கு 5 ஆண்டாக வட்டி கட்டி வருகிறோம் என்றார்.
மேலும், தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டில் 93 சதவீதம் தான் கடன் அதிகரித்துள்ளது. கடன் பற்றி பேச அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு தார்மீக உரிமை இல்லை. *சேராத இடம் தேடி போய் சேர்ந்திருக்கிறது அ.தி.மு.க. என்றார்.

இதையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனையோடு ஒன்றிய அரசு நிதி வழங்க மறுக்கிறது என கூறியதுடன், நிதி பிரச்சனை குறித்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். நிதி பிரச்சனை குறித்து ஜி.எஸ்.டி.கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. நிதி பிரச்சனையில் அக்கறை இருந்தால் அதிமுக எம்.பி.க்கள் குரல் கொடுங்கள் என்றார்.
மத்தியஅரசு, திமுக அரசு துரோகத்துக்கும் கொடுமைக்கும் ஆளாகவேண்டும் என செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனையோடு ஒன்றிய அரசு நிதி வழங்க மறுக்கிறது என தெரிவித்தார்.