புதிதாக அமையவுள்ள மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கும் வாய்ப்பிருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய கடம்பூர் ராஜு, “அடுத்ததாக வர உள்ள நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவே வெற்றிபெறும். புதிதாக அமையவுள்ள மத்திய அமைச்சரவையில் அதிமுக பங்கேற்கவும் வாய்ப்பு உள்ளது. அது தொடர்பான முறையான அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை காலை தெரியவரும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ஓ.பி ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால் வரவேற்பேன்” என்று தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel