சென்னை: அதிமுக பொதுக்குழு பல்வேறு செக்யூரிட்டி வசதிகளுடன், ஹைடெக்காக நடத்த எடப்பாடி தரப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.  பொதுக்குழு நடைபெற உள்ள வானகரத்தில் ஆய்வு செய்த எடப்பாடி ஆதரவாளர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர்  நந்தம் விசுவநாதன் தடுக்கி விழுந்தார். இது மற்றவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அபசகுணமாக பார்க்கப்படுகிறது.

எடப்பாடி தரப்பு ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டியுள்ளது. இதில், ஒற்றை தலைமைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் பொதுக்செயலாளர் பதவியை அதிமுகவில் உருவாக்கி, தற்காலிக பொதுச்செயலாளராக பதவி ஏற்கவும் எடப்பாடி பழனிச்சாமி தயாராகி வருகிறது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் பல்வேறு வழக்குகள் போடப்பட்ட நிலையில், ஒரே ஒரு வழக்கை தவிர மற்ற அனைத்து வழக்குகளும் தள்ளுபடியாகி உள்ளன. பொதுக்குழுவுக்கு தடை கேட்ட வழக்கு இன்று விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு மற்றம் நீதிமன்ற விவகாரம் குறித்து தனது ஆதரவாளரகள் இடையே எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக ஆலோசனை  மேற்கொண்டு வருகிறார்.  மாவட்ட வாரியாக ஸ்பெஷல் பேருந்துகள் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களை சென்னை அழைத்து வருவதற்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும்,  ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சென்னைக்கு பேருந்து ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 11ந்தேதி பொதுக்குழு கூட உள்ள நிலையில், 10ந்தேதி பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தனது  ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களில் ஒருவர் கூட மிஸ் ஆகி விடக்கூடாது என கண்டிப்பாக தெரிவித்துள்ளாராம். அதன்படி பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் தீவிரமாக வேலைகளைச் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், தமிழகஅரசு பொதுக்குழு கூட கொரோனாவை காரணம் காட்டி கடைசி நேரத்தில் அனுமதி வழங்க மறுத்தால, ஆன்லைனில் பொதுக்குழு நடத்தவும் தயாராகி வருகிறது. ஆன்லைன் வாயிலாக பொதுக்குழுவில் பங்கேற்கும் அதிமுகவினருக்கான பயிற்சி முகாம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் பயிற்சியில் மாவட்ட செயலாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர். அவர்கள் மூலம் மற்ற பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் மாவட்ட வாரியாக பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்காக, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டத்தில் பல்வேறு ஹைடெக் வசதிகள் செய்யப்ப்பட்டு வருவதாவும் கூறப்படுகிறது. கொரோனா தொற்று பரவி வருவதால்,  திறந்தவெளியில் பந்தல் அமைத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி  கலந்துகொள்ளும் வகையில் 3 ஆயிரம் இருக்கைகள் போடப்படுகின்றன.

மேலும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தில் க்யூஆர் கோடு, ஆர்எஃப்ஐடி வசதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கவும் ஏற்பாடுகள் செய்ப்பட்டு வருகிறது.

மேலும், பொதுக்குழுவுக்கு வருகை தரும் ஊழியர்களின் வருகையை பதிவு செய்வதற்காக பயன்படும் ஆர்எஃப்ஐடி கார்டு மூலம் பொதுக்குழு அரங்கிற்குள் வரும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மேடை அமைத்தல், பந்தல் அமைத்தல் போன்ற பணிளை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் நேரில் சென்று  ஆய்வு செய்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்பட நிர்வாகிகள்  ஆய்வு மேற்கொண்டனர். அப்போது,  ஏற்பாடுகளை பார்வையிட்ட நத்தம் விஸ்வநாதன் தடுமாறி விழுந்தார். தடுமாறி விழுந்த நத்தம் விஸ்வநாதனை அதிமுக நிர்வாகிகள் தூக்கிவிட்டு தண்ணீ ர்தந்து அமர வைத்தனர். இது பொதுக்குழு உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. நத்தம் விசுவநாதன் தடுக்கி விழுந்தது அபசகுணமாக பார்க்கப்படுகிறது.