டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. பரபரப்பான வாதங்களை தொடர்ந்து விசாரணைக்கு நாளை மாலைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நாளையுடன் விசாரணை முடியும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

 கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து  தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு  வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு பல கட்ட விசாரணைக்கு பிறகு ஜனவரி 4-ந் தேதிக்கு (நேற்று) தள்ளிவைக்கப்பட்டது.  அதைத்தொடர்ந்து, வழக்கு இந்தவாரத்திலேயே முடிக்கும் நோக்கில் இன்றும் தொடர் விசாரணை நடைபெற்றது. நேற்றைய விசாரணையின்போது,  இந்த வழக்கை விசாரிக்க வேண்டியதன் அவசியத்தையும், இதுவரை வழக்கு கடந்து வந்த பாதைகளையும்  இரு தரப்பு வழக்கறிஞர்களிடம் கேட்டறிந்தனர்.  அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல் சி.ஏ.சுந்தரம், சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் சிவில் வழக்கு தொடர்ந்ததையும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட விபரத்தையும் எடுத்து கூறினார்கள்.

அப்போது, ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டனர்.  அந்த பதவி 2026-ம் ஆண்டு வரை உள்ளது என்று வைரமுத்து தரப்பு வக்கீல் ரஞ்சித் குமார் கூறினார். ஆ னால் இருவரும் போட்டியில்லாமல் தேர்வு செய்யப்பட்டது செயற்குழுவில் தான். அதற்கு பொதுக் குழுவின் ஒப்புதல் தேவை என்றார்.

அ.தி.மு.க. பொதுக்குழு கட்சியின் விதிகளுக்கு முரணாக கூட்டப்பட்டதாகவும், தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளரை அந்த பொதுக்குழுவில் நீக்கி இருக்கிறார்கள். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பொதுக்குழு அவரை நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கை இன்று (5ந்தேதி)க்கு ஒத்தி வைத்த நீதிபதிகள்,  வைரமுத்து தரப்பில் 45 நிமிடங்கள், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஒரு மணி நேரம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் 30 நிமிடம் வாதிடுவதற்கு நேரம் கேட்டுள்ளார்கள்.

இந்த பரபரப்பான கட்டத்தில் இன்று பிற்பகலில் மீண்டும் விசாரணை தொடங்கியது. இன்றைய விசாரணையின்போது, அதிமக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் பரபரப்பு வதங்கள் முன் வைக்கப்பட்டது. குறிப்பாகஅதிமுகவின் அடிப்படை விதிகளையே தற்போது மாற்றி அமைத்துள்ளனர். கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியையும் மாற்றியுள்ளனர். பொதுக்குழுவை ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும். தேவைப்பட்டால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட முடியும்” போன்ற வாதங்கள் முன் வைக்கப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பில் வாதிடும்போது,  பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவர முயல்வது, அதிமுக சட்ட விதிகளுக்கு முரணானது என்று கூறியதுடன்,  ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர்கள என்பது 5 ஆண்டு பதவிக்காலம், அப்படி இருக்கும்போது, 5 ஆண்டுகள் கட்சியின் முடிவுகளை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்துதான் முடிவு செய்ய வேண்டும்  என்பது விதி என்று எடுத்துரைத்ததுடன், இருவருமே இணைந்து முடிவெடுத்தால் மட்டுமே அவை செல்லும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய வழக்கறிஞர், அதிமக பொதுச்செயலாளர் பதவியை பழனிச்சாமி குறுக்கு வழியில் பெற்றுள்ளார் என்று குற்றம் சாட்டியதுடன், அதிமுகவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்செயலாளர் பதவிதான் என்றும், ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர் என மாற்றம் கொண்டுவந்த பின், அதில் இபிஎஸ் குழப்பத்தை உருவாக்குகிறார் என்று வாதிடப்பட்டதுடன், என்னுடன் (ஓபிஎஸ்) அதிமுக உறுப்பினர்கள் யாரும் எந்த தொடர்பும் கொள்ளக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முடிவெடுத்து அறிவித்தது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், எந்த தொடர்பும் கூடாது என்றால், அது எந்த அளவுக்கு என சிரித்தபடியே கேட்டனர்.

இதைத்தொடர்ந்து, அதிமுக வழக்கை நாளை 12மணிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், வழக்கில் அனைத்து தரப்பினரும், நாளை வாதங்களை நிறை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வழக்கை ஒத்தி வைத்தனர்.