சென்னை; அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகார பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் நிலையில் இன்று பொதுக்குழு கூட்டம் கூடியது. சரியாக 11.45மணி அளவில் கூட்டம் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

பொதுக்குழு மேடையில் இபிஎஸ், ஓபிஎஸ் ஏறியதும் அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். இருவரும் மேடையேறி உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தனர் மேடையில், ஈபிஎஸ், ஓபிஎஸ் நடுவில் உள்ள சேரில் தற்காலிக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அமர்ந்துள்ளார்.

இந்த நிலையில், முதலில் ஒற்றைத்தலைமை விவகாரம் குறித்து விவாதம் நடத்த தூத்துக்குடி மாவட்ட உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் சலசலபு ஏற்பட்டது. இதையடுத்து பேசிய முன்னாள் அமைச்சர்,  சிவி சண்முகம் , அதிமுக பொதுக்குழு  அனைத்து தீர்மானங்களையும்  நிராகரிக்கிறது என ஆவேசமாக கூறினார். அதுபோல அதிமுக பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக கே.பி.முனுசாமி கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்து விட்டார்கள். அனைத்தையும் நிராகரித்த அவர்களின் ஒற்றை கோரிக்கை ஒற்றைத்தலைமை. ஒற்றைத்தலைமை தீர்மானம் எப்போது அந்த தீர்மானங்களோடு இணைக்கப்படுகிறதோ, அப்போது மற்றொரு தலைமை பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றார்.