சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு இன்று காலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க.வின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் இன்று
காலை 9.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.. இதில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலுமிருந்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் சென்னை வந்துள்ளனர். பெரும்பாலான உறுப்பினர்கள் நேற்றே சென்னை வந்துவிட்டார்கள். இன்று காலை சிலர் வந்து சேர்ந்தனர்.
இவர்கள் அனைவரும் காலை 7 மணிக்கெல்லாம் மெரினா பகுதியிலுள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்ற அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்பிறகு வானகரம் கிளம்பி சென்றனர்.