Skip to content
  • Tue. Sep 15th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

டிசம்பரில் அதிமுக பொதுக்குழு?

Oct 9, 2020

சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பரபரப்பு ஓய்ந்துள்ள நிலையில்,  அ.தி.மு.க. பொதுக்குழு வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கூட்டப்பட இருப்பதாக அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான  ஜெயலலிதாவை மறைவைத்தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டப் பட்டது. அதில், சசிகலா  அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந் தெடுக்கப்பட்டார். இதையடுத்து கட்சி இரண்டாக உடைந்தது. சசிகலா சிறைக்கு சென்றார். பின்னர் உடைந்த அதிமுக ஒட்டப்பட்டது. அதையடுத்து, , அதிமுக பொதுக்குழு கடந்த 2017ம் ஆண்டு  செப்டம்பர் 12ந்தேதி அன்று கூடியது.  அப்போது,  சிகலா பொதுச்செயலராக நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தும்,  டிடிவி தினகரன் உள்பட சசிகலா குடும்பத்தினரை அதிமுகவில் இருந்து நீக்கியும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.  பின்னர், கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 21ந்தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் வரும் டிசம்பர் முதல்வாரத்தில் பொதுக்குழுவை கூட்ட திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக ஆலோசனைகளை முன்னெடுத்து வரும் சூழலில், அதிமுகவிலும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க பொதுக்குழு கூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன்,  அ.தி.மு.க.வில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டு குழுவுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டியதும் அவசியமாக உள்ளது.

இதன் காரணமாக,  அ.தி.மு.க. பொதுக்குழுவை வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரம் அல்லது 2-வது வாரம் கூட்ட முடிவுசெய்யப்பட்டு இருப்பாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் கலந்துகொள்ள தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் , சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்ளும் வகையில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அதிமுக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

Post navigation

கூட்டணியில் சலசலப்பு: இன்று மாலை முதல்வர் பழனிசாமியை சந்திக்கிறார் பாஜக தலைவர் எல்.முருகன்!
சென்னையில் இருந்து ஆயுத பூஜையை முன்னிட்டு 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Related Post

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer