சென்னை:
சென்னை வானரகத்தில் நடக்கும் பொதுக்குழுவில் பங்கேற்க புறப்பட்ட அதிமுகவினர், மதுராந்தகம் அருகே விபத்தில் காயம் அடைந்தனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் காலை 9 மணிக்கு தீர்ப்பு அளிக்கவுள்ளது. இதற்கு மத்தியில் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபம் அருகே உள்ள திறந்தவெளி அரங்கில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் காலை 9 15 மணிக்கு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பொதுக்குழுவில் பங்கேற்க உள்ள 2 ஆயிரத்து 665 உறுப்பினர்களுக்கு கியூஆர் கோடு அடங்கிய ஆர்.எப்.ஐ.டி முறையிலான நவீன அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அழைப்பிதழ்கள் ஸ்கேன் செய்யப்பட்டு இயந்திரத்தில் ஒப்புதல் கிடைக்கப்பெற்றால் மட்டுமே பொதுக்குழுவில் பங்கேற்க உள்ளே செல்ல முடியும்.
இதற்காக 15 ஸ்கேனர்கள் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளன. பொதுக்குழு உறுப்பினராக இல்லாத ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. . அரங்கத்தின் முகப்புத் தோற்றம் கோட்டை வடிவிலும் மேடை 30 மீட்டர் நீளத்துக்கும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை வானரகத்தில் நடக்கும் பொதுக்குழுவில் பங்கேற்க புறப்பட்ட அதிமுகவினர், மதுராந்தகம் அருகே விபத்தில் காயம் அடைந்தனர். அதிமுகவினர் சென்ற வேன், கண்டெய்னர் லாரி மீது மோதியதில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
[youtube-feed feed=1]