விழுப்புரம்:
சின்னசேலம் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பரமசிவம் வருமாத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தற்போது விழுப்புரம் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை என விழுப்புரம் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது
மேலும் அவருக்கு ரூபாய் 33 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருடைய சொத்துக்களை அரசுடமையாக்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பு தேர்தல் நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது