சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தற்போது வரை 40% மட்டுமே நிறைவு பெற்றிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய உதயகுமார், மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக கூறுவதில் உண்மையில்லை என்றும் 40 சதவீத பணிகளே நிறைவு பெற்றிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் கடந்த காலங்களை போல் அல்லாமல் சிறு மழைக்கே அமைச்சர்கள் களமிறங்கி வேலை பார்ப்பது வேதனையளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் சென்னையில் கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பு பணியும் மேற்கொள்ளாமல் புயல் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்த நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு மழைநீர் வடிகால் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மூன்றாண்டுகள் தேவைப்படும் நிலையில் பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களைத் தாண்டி ஒரே ஆண்டில் பல்வேறு இடங்களில் பலகட்ட பணிகள் நிறைவடைந்திருப்பதாக அமைச்சர்கள் மற்றும் திமுக-வினர் கூறிவரும் நிலையில் 40 சதம் வேலை கூட முடியவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.