சென்னை:
அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம்உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 90.

அரங்கநாயகம் , தமிழக சட்டமன்றத்துக்கு 4 முறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இரு முறை தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்தும், இருமுறை கோவை மேற்குத் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் எம். ஜி. ஆர் அமைச்சரவையிலும் பின்னர் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் கல்வியமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel