சென்னை: ஆகஸ்டு 9ந்தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டம் வாரியாக அதிமுக  நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்த  ஆலோசனை முடிந்த நிலையில், அடுத்த கட்ட நிகழ்வுகள் தொடர்பாக விவாதிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஆக.9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த மாவ ஆலேசானை கூட்டத்தில் 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்றும், தேர்தலுக்காக பணியாற்ற வேண்டும் என்றும் கட்சியினருக்கு பழனிசாமி அறிவுறுத்தியதுடன்,  கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிகளிலும்  ஈடுபட வேண்டும் என கட்சியினரிடம் அறிவுறுத்தி இருந்தார். இதை தொடர்ந்து, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளார்.

அதன்படி, நாளை மறுதினம் (ஆகஸ்ட் 9-ம் தேதி) அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலாளர் கூட்டம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் ஜூன், ஜூலையில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனவே, செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது, மாவட்ட அளவில் கட்சியை பலப்படுத்துவது, சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகுவது, தேவையான குழுக்களை அமைப்பது, சசிகலா, ஓபிஎஸ் குறித்த விஷயங்களை விவாதிப்பது ஆகியவற்றுக்காக வரும் ஆக.9-ம் தேதி காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலாளர் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில், பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், தலைமைக்கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.