விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி மரணமடைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் தோல்வியை சந்தித்து வரும் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது கட்சியின் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது.

இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 15) அறிவித்துள்ளார்.

https://x.com/AIADMKOfficial/status/1801930467643392431

அதிமுக கட்சி கலகலத்துப்போயுள்ள நிலையில் அதன் உறுப்பினர்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது இதனால் தேர்தலில் களத்தில் இறங்கி வேலைசெய்யக் கூட ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தோல்விக்குப்பின் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத எடப்பாடி பழனிச்சாமி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்திருப்பதன் மூலம் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழந்து அதிமுக-வை லெட்டர் பேட் கட்சியாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் குமுறுகின்றனர்.