டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், இருதரப்பும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக பொதுக்குழு விவகார வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் தொடர்ந்த விசாரணை இன்று வரை தொடர்கிறது. இன்றைய விசாரணையின்போது, வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அதிமுக பொதுக்குழவின் நிகழ்ச்சி நிரலில் பன்னீர் செல்வத்தை நீக்குவது குறித்த அறிவிப்பு இல்லாதபோது பன்னீர் செல்வத்தை எப்படி நீக்கினீர்கள் என்று எடப்பாடி தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.
‘மேலும், கட்சியில் எந்த ஆதாரவும் இல்லாத ஒருவர் பொதுக்குழு கூட்டத்தையும் முடிவையும் எதிர்ப்பது அடிப்படையற்றது என்று அதிமுக தலைமை அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜனநாயக அடிப்படையில் பலம் பொருந்திய கட்சியை செயல்பட விடாமல் தடுப்பதை ஏற்க முடியாது. நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் பன்னீர் செல்வம் தவறான தகவல்களை அளித்து வருகிறார் என்று அதிமுக தலைமை அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்த ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டபோது, அப்போது, அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது சட்டவிரோதம் என ஓபிஎஸ் தரப்பில் மீண்டும் வாதம் முன்வைக்கப்பட்டது. பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பான நோட்டீஸ் முன்கூட்டியே வழங்கவில்லை என குற்றம் சாட்டியதுடன், நோட்டீஸில் இடம்பெறாத விஷயங்களை அதிமுக பொதுக்குழுவில் தீர்மானமாக கொண்டுவந்து நிறைவேற்றி இருக்கிறார்கள்.
அதிமுகவில் இல்லாத 2 பதவிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டதே பழனிசாமி தரப்பு தான். 2 பதவிகளை உருவாக்கி அனைத்து நடவடிக்கையும் முறையாக சென்றபோது குழப்பம் விளைவிக்க முயற்சி. குழப்பங்களை விளைவிக்கும் வகையில் 2 பதவிகளையும் நீக்க வேண்டும் என சொல்வதும் பழனிசாமி தரப்பே எனவும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வாக இருந்தது. தேர்தலில் யாரும் போட்டியிடாததால் இப்பதவிகள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டது. அடிப்படை உறுப்பினர்கள் தான் உயர்மட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என்பது எக்காலத்திலும் மாற்ற முடியாத விதி எனவும் ஓபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
இதையடுத்து, இரு தரப்பும் , தங்களது வாரதங்களை திங்கள்கிழமை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.