சேலம்:

சேலத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின், சேலத்தில் அலை கடலென திரண்டு மக்கள் வெள்ளத்தில் பேசும்போது,  பேரத்தில் இணைந்துள்ள கட்சிகளுக்கு மக்களின் வலி தெரியாது என்றும், எட்டுவழிச்சாலை திட்டத்தை திமுக தடுத்து நிறுத்தும் என்றும் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சேலத்தில் பிரசாரம் செய்து வருகிறார். அலைகடலென திரண்ட பொதுக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் பார்த்திபனுக்கு வாக்கு கேட்டு  உரையாற்றிய ஸ்டாலின், அதிமுக, பாஜகவை கடுமையாக சாடினார்.

சேலம் திமுகவின் இரும்புக்கோட்டை என்று கூறியவர், மக்களின் எழுச்சி திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பதை காட்டுகிறது….  சென்னை கோட்டையில் திமுக ஆட்சி விரைவில் உதயமாகும் என்று கூறினார்.

இந்த ஆட்சியில்தான், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி, டி.ஜி.பி, மீது ஊழல் புகார்கள்,  கவர்னர் மீது நிர்மலா  புகார்,  மோடி மீது ரபேல் போன்ற ஊழல்களால்  கூட்டணி உருவாகி உள்ளது. அவர்களி டமே ஊழல் உள்ளதால், நாம் அவர்களிடம்  புகார் கொடுக்க முடியாது. பொதுமக்களாகிய உங்களிடம் புகார் கொடுக்க வந்துள்ளோம் என்று கூறியவர்,  மோடி, எடப்பாடியை தோற்கடி யுங்கள். இவர்களோடு மூன்றாவதாக மதிப்பிற்குரிய ராமதாஸ் அய்யா இணைந்துள்ளார் அவரையும் தோற்கடியுங்கள் என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கடவுள் இல்லை என்றும், கடவுள் உண்டு என்றும் சொல்லும் முதல்வர்களை பார்திருக்கிறோம். நான்தான் கடவுள் என்பவர் எடப்பாடி என்று சொன்ன ராமதாஸ் இன்று அவர்களிடம் இணைந்துள்ளார்..

. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்பது அதிமுக தேர்தல் அறிக்கை. ஆனால் அடுத்த ஆண்டிற்கும் நீட் தேர்விற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது ”. என்று கூறியவர், அதிமுக கூட்டணி பேரத்தில் அடிப்படையில் உருவானது என்று விளாசினார்.

தொடர்ந்து 8 வழிச்சாலை திட்டம் குறித்து பேசியவர், மக்கள் ஏற்காத இந்தத் திட்டம் தி.மு.கழக ஆட்சியில் ரத்து செய்யப்படும் என்றும்,  மக்களை பாதிக்காமல் சாலை வசதி மேம்படுத்தப்படும் என்றவர், கமிஷனுக்காக விளைநிலங்களை அழித்து சென்னை-சேலம் 8 வழிச்சாலையை அதிமுக அரசு கொண்டுவருகிறது, திமுக ஆட்சிக்கு வந்தால், இந்த திட்டம் தடுக்கப்படும் என்றவர்,  பேரத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும் கூட்டணிக்கு மக்களின் வலி தெரியுமா?.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.