சென்னை: ராயப்பேட்டை அ.தி.மு.க., அலுவலகத்தில் அமைச்சர் கேஎன் நேரு படத்துடன் , நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் குறித்து பேனர் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை போலீசார் அகற்ற முயற்சித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் காவல்துறையினருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மக்கள் கூட்டம் கூடியது.
இதையடுத்து, காவல்துறையினர் பேனரை அகற்றுவதை விட்டுவிட்டு சென்றனர்.

அமைச்சர் நேருவின் கீழ் உள்ள நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில், 2,538 பணி நியமனத்தில், ஒரு வேலைக்கு 25 லட்சம் ரூபாய் முதல் ரூ.35 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு அரசு வேலை கொடுத்தாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறைக்கு விரிவான கடிதம் எழுதியதுடன், அதுகுறித்து வழக்கு பதிவு செய்யவும் அறிவுறுத்தி உள்ளது. ஆனால், இதுவரை தமிழ்நாடு காவல்துறை அதன்மீதா நடவடிக்கை குறித்து எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை. அதுபோல, முதல்வர் ஸ்டாலினும் விளக்கம் அளிக்கவில்லை.
இந்த விவகாரம் விவாதப்பொருளாக மாறி உள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திமுக அரசுமீது, பள்ளிக்கரசை சதுக்கு நிலத்தில் வீடு கட்ட தனியார் நிறுவனத்து விதிகளை மீறி அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதில் ரூ.2000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி உள்ளது. இதையடுத்து நீதிமன்றமும், அங்கு கட்டிடங்கள் கட்ட தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், தி.மு.க. அரசின் அரசு வேலைவாய்ப்பு மோசடியை அம்பலப்படுத்தும் வகையில், சென்னையில், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் முன், அக்கட்சியின் ஐ.டி., அணி சார்பில், பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டது.
அந்த பேனரில் , ‘2,538 பணியிடங்களுக்கு 25 லட்சம் என்றால், மொத்த லஞ்சப்பணம் எவ்வளவு’ என்று பொது மக்களில் ஒருவர் கேள்வி கேட்பதுபோல் சித்தரிக்கப்பட்டிருந்தது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், அங்கு வந்த காவல் துறையினர், பேனரை அகற்ற முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க., – ஐ.டி., அணி செயலர் ராஜ் சத்யன், காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கூட்டம் கூடியது. மேலும், அதிமுக தரப்பில், அந்த பேனரை எடுக்க முடியாது, வேண்டுமானால் வழக்கு நீதிமன்றத்தில் போட்டு கொள்ளுங்கள்’ எனக் கூறினார்.
இதனால், வேறுவழியின்றி, அந்தபேனரை அகற்றும் முடிவை கைவிட்டு, போலீசார் அங்கிருந்து கிளம்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
https://patrikai.com/corruption-everywhere-and-corruption-everything-in-dmk-regime-urges-cbi-investigation-opposition-parties-including-edappadi-insist-on-rs-888-crore-municipal-department-scam/