தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸும், மை ஹோம் குரூப்பும் இணைந்து ஆஹா ஓடிடி தளத்தை நடத்துகின்றன.
தெலுங்கு சினிமாக்கள், வெப் தொடர்களை மட்டும் இதுவரை இவர்கள் ஒளிபரப்பி வந்தனர். தமன்னாவின் லெவன்ந்த் ஹவர், அமலா பாலின் குடி எடமைதே வெப் தொடர்கள் இவர்களின் தயாரிப்பே.
தற்போது இவர்கள் தமிழிலும் ஆஹாவின் ஒளிபரப்பை தொடர தீர்மானித்துள்ளனர். முதல்கட்டமாக சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் தயாரித்த படங்களை வாங்க பேச்சுவார்த்தை நடக்கிறது. தொடர்ச்சியாக தமிழ் படங்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளனர்.