அக்ரிசக்தி-யின் முன்னெடுப்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் ‘தொழில்முனைவுப் பொங்கல்-2022’ என்ற தலைப்பில் வரும் ஞாயிறன்று (7 பிப்ரவரி 2021) ஒருநாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
2022ஆம் ஆண்டு பொங்கலுக்குள் கிராமத்து விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க இந்த கருத்தரங்கு ஒரு முன்முயற்சியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமத்து விவசாயிகளையும், நகர்ப்புற வணிகர்களையும் ஒருங்கிணைத்து, விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் (அ) விற்பனை முறையை உருவாக்கி, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதை நோக்கமாக கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த பண்ணையம், மாட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை அமைக்கவும் இலவச ஆலோசனை வழங்கப்படும்.
விவசாயிகள், தொழில்முனைவோர், விவசாய மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு கருப்புக்கவுனி, மாப்பிள்ளை சம்பா விதை நெல் இலவசமாக வழங்கப்படும் என்று அக்ரிசக்தி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘தொழில்முனைவுப் பொங்கல்-2022’ நிகழ்ச்சி குறிப்பு :
நாள் : 07.02.2021
கிழமை : ஞாயிறு
இடம்: புகழ் மெட்ரிகுலேசன் பள்ளி, கிருஷ்ணகிரி மெயின்ரோடு, மத்தூர்
அனைவரும் கலந்துகொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு
அக்ரிசக்தி – 9940764680