சென்னை: இயற்கைபேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் இழப்பீட்டுக்கு ₹ 208 கோடி ஒதுக்கீடு, வேளாண் சார்ந்த பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானயிம், ஆடு, கோடி, மீன் வளர்போர்களுக்கு வட்டி மானியம் உள்பட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற திருக்குறளுடன் வேளான் பட்ஜெட்டை உரையை தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சிறுதானிய கதிர் கொத்துகளை கொடுத்து வாழ்த்து பெற்றார்.
2020-2021ம் ஆண்டில் 152 லட்சம் ஏக்கராக இருந்த வேளாண் சாகுபடி பரப்பு, 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது-வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
சீரக சம்பா போன்ற பாரம்பரிய நெல் வகைகள் 1,000 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்ய வழங்கப்படும்.
2022-23ம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 116 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
வேளாண் பணிகளுக்கான ஊதியம் தற்போது அதிகமாக உள்ளது.
இதனை எதிர்கொள்ள வேளாண் பணிகளுக்கு தேவையான அனைத்து வகையான வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
கலைஞர் வேளாண் திட்டம் 7,075 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க, வேளாண் பொருட்களை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்கிறது.
கடந்த டிசம்பரில் தென்மாவட்டங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் இதற்காக ₹208 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு இலக்கு.
மண்வளத்தை பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர் வேளாண்மை போன்ற அனைத்து செய்முறைகளையும் ஊக்கப்படுத்த ‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்’ என்ற புதிய திட்டம் ரூ.206 கோடி நிதியில் செயல்படுத்தப்படும்.
ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ.2.40 கோடி நிதி ஒதுக்கீடு.
உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு.
தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ₹6.27 கோடி நிதி ஒதுக்கீடு.
மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்; சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு.
பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ.2.40 கோடி நிதி ஒதுக்கீடு.
உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு.
தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ₹6.27 கோடி நிதி ஒதுக்கீடு.
மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்; சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு.
சீரக சம்பா போன்ற பாரம்பரிய நெல் வகைகள் 1,000 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்ய வழங்கப்படும்.
பாரம்பரிய உணவு வகைகள் பாதுகாக்கப்படும்.
பஞ்சகவ்யம், மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்ய ஆர்வமுள்ள குழுக்களுக்கு ரூ.1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
சிறிய, பெரிய நாற்றங்கால் அமைக்க வேளாண் காடுகள் திட்டத்திற்கு ரூ.13 கோடி ஒதுக்கப்படும்.
ஒருங்கிணைந்த பண்ணை தொடங்க ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு.
வாழை , பப்பாளி உள்ளிட்ட பழ வகைகளை வீடுகள் மற்றும் தோட்டங்களில் வளர்க்க ஊக்கிவிக்கப்படும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் இரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்.
எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு.
நிலக்கடலை போன்ற வேளாண் பயிர்களை ஜிப்சம் உரம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு
வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி, விவசாயிகளுக்கு கொடுக்க ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
அனைத்து பயிர்களின் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் நோக்கில் 4,75,000 பரப்பில் அதிகரிக்க ரூ.40.27 கோடி மத்திய மானிய நிதி ஒதுக்கீடு.
வேளாண் பட்ஜெட் தொடர்பான முழு விவரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள பிடிஎஃப் பைலை டவுன்லோடு செய்யவும்…