லக்னோ,

டைபெற்று முடிந்த உ.பி. மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதியஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில்  முதல் அமைச்சரவை கூட்டத்தில்  விவசாயிகளின் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் 30,729 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் பல விவசாயிகளுக்கான நலத்திட்டங்களும் அறிவிக்கப் பட்டுள்ளன.

உ.பி. அரசின் இந்த செயலுக்கு ராகுல்காந்தி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

உ.பி. அரசின் இந்த அறிவிப்பு காரணமாக இரண்டு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவர் என்றும்,  விவசாயிகளுக்கு  பணம் அவர்கள் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி. முதல்வரின் இந்த விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்கு அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

ராகுல்காந்தி ஏற்கனவே, டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு நேரில் சென்று ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.