சென்னை:

திரைப்பட தயாரிப்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 48 நாட்களாக புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை. படப்பிடிப்பும் நடக்கவில்லை. சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில் இன்று காலை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வேலுமணி, வீரமணி ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை தொடங்கியது. பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், நிர்வாகிகள் கதிரேசன், பிரபு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, கேயார் மற்றும் தியேட்டர் அதிபர்கள் சங்க பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் விஷால் கூறுகையில், ‘‘அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடம்பாடு ஏற்பட்டுள்ளது. திரை உலக பிரச்சினைகள், தியேட்டர் அதிபர்களின் கோரிக்கைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. தியேட்டர்களில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான கட்டணத்தை குறைப்பதற்கும் டிக்கெட் விற்பனையை கணினிமயம் ஆக்குவது, கேளிக்கை வரி குறைப்பு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேலும் வேலைநிறுத்தத்தை திரும்பப்பெறுவது குறித்து நாளை முடிவு எடுக்கப்படும்’’என்றார்.