டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
ராணுவத்தில்  ஒப்பந்த முறையில் 4ஆண்டுகள் சேவையாற்றும் வகையில் ‘அக்னிபாத்’ என்னும் புதிய திட்டத்தை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருகிந்றனர். இதையடுத்து, அக்னிபாத் திட்டத்தில் சில தளர்வுகளை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி,  அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர விரும்பும் வீரர்களின் வயது உச்சவரம்பு 25ஆகவும், அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேருவோருக்கு அசாம் ரைஃபில் படை பிரிவில் சேர 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில்,  அக்னிபாத் ‘திட்டத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,  அரசு தொடங்கியுள்ள அக்னிபாத் ஆள்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும்,  ரயில்வே. இந்தத் திட்டத்தால், தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் அதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.