வாரணாசி:
அக்னிபாத் போராட்டத்தின் போது அரசு பஸ்களை எரித்தவர்களிடம் நஷ்டத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாரணாசி மாவட்ட கலெக்டர் கவுஷல் ராஜ் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வாரணாசி மாவட்டத்தில் கடந்த 17ம் தேதி போராட்டக்காரர்கள் 36 பஸ்களை எரித்துள்ளனர். இதனால் அரசுக்கு, 12.97 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. சேதத்தொகையை அவர்களிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]