சான்ஃப்ரான்சிஸ்கோ
இளைஞர்களின் ரத்தம் ஏற்றப்பட்டால் முதிய்யொர் மீண்டும் இளமையை மீட்டெடுக்கலாம் என அமெரிக்காவின் ஒரு சிகிச்சை முறை தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் உள்ள சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ள ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிலையம் முதியோர்களுக்கு இளமையை மீட்டளிக்கும் ஒரு சிகிச்சையை கண்டுபிடித்துள்ளது. அதாவது இளைஞர்களின் ரத்தத்தில் உள்ள ப்ளாஸ்மா திரவம் முதியோர்க்கு செலுத்தப் பட்டால் அவர்கள் இளைஞர்களைப் போல் செயல்பட முடியும் என தெரிவித்துள்ளது. இதற்கான சிகிச்சை கட்டணம் 8000 அமெரிக்க டாலர்கள் என அறிவித்துள்ளது. பல முதியோர்கள் இந்த ஆய்வில் கலந்துக் கொள்ள விருப்பம் தெரிவித்து கட்டணம் செலுத்தினர்.
ஆய்வில் பங்கேற்றுக் கொண்ட முதியர்வர்கள் ஒவ்வொருவரின் உடலிலும் இளைஞர்களின் ப்ளாஸ்மா திரவம் 2.5 லிட்டர் செலுத்தப்பட்டது. அதன் பின் பங்குப் பெற்ற முதியோர்கள் தாங்கள் மிகவும் புத்துணர்வுடன் இருப்பதாகவும், இளமையை நன்கு உணர்வதாகவும் கூறி உள்ளனர். மருத்துவர்கள் இவர்களை பரிசோதித்தபின், இவர்களின் தோற்றம், இதயச் செயல்பாடு ஆகியவை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் நீரிழிவு நோய் போன்றவை மிகவும் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் மருத்துவர்கள் இதன் மூலம் இளமையாக வாழ முடியுமே தவிர இறப்பை தவிர்க்க முடியாது என கூறி உள்ளனர்.