கோவை

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு இல்லம் மற்றும் அவருக்குச் சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள் மீண்டும் சோதனை இட்டு வருகின்றனர்.

அதிமுகவை சேர்ந்த முனாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது வருமானத்துக்கு அதிகமாக  ரூ. 58.கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது.  இதையொட்டி அமைச்சர், அவர் தம்பி, தம்பி மனைவி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.   இதையொட்டி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை இட்டு ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இன்று மீண்டும் முன்னால் அமைச்சர் எச் பி வேலுமணி இல்லம் உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை இட்டு வருகின்றனர்.  இன்று காலை 6 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனை 60 இடங்களில் நடைபெற்று வருகிறது.   ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் 23 இடங்களில் சோதனைகள் நடந்தன.

அப்போது ரூ.811 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை அமைச்சர் தனக்கு வேண்டியவர்களுக்கு வழங்கியது தெரிய வந்ததாகக் கூறப்பட்டது.  தற்போது இந்த சோதனை கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.   குறிப்பாக அமைச்சருக்குச் சொந்தமான இடங்கள் தவிர அவரது நண்பர்கள் வீட்டிலும் சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.