நவீன தொழில் நுட்பம் வளர வளர, சாதகங்களைவிட பாதகங்களே அதிகமாக இருக்கும்போலும். முன்பைவிட இந்த வாட்ஸ்அப் காலத்தில்தான் வதந்திகள் றெக்கை கட்டி பறக்கின்றன.
சமீபத்தில் அப்பபடி பறந்தது, கவுண்டமணி குறித்து. உடனே ஆளாளுக்கு அவருக்கு சமூகவலைதளங்களில் பலரும் அஞ்சலி செலுத்த ஆரம்பிக்க, மனிதர் ஆத்திரத்தின் உச்சிக்கே போய்விட்டார். தனது  பி.ஆர்.ஓ.வான விஜயமுரளி, “கவுண்டமணி நலமாக உள்ளார்” என்று உடனடியாக அறிக்கைவிட வைத்தார்.
goundamani88-19-1474278803
சிலர் பதறிப்போய், கவுண்டமணிக்கே போன் போட்டு விசாரிக்க.. மனிதர் பொங்கித் தள்ளிவிட்டாராம்.
“ஏற்கெனவே இப்படித்தான் ஒரு முறை புரளியை கிளப்பினானுங்க. இப்போ மறுபடி (இரு நாட்களுக்கு முன்) வதந்தி பரப்பியிருக்கிறானுங்க. நாம நல்லபடியா உயிரோட இருக்கிறது புடிக்கல போலிருக்கு,’ என்று ஆத்திரத்துடன் சொல்லியிருக்கிறார்.
மகிழ்ச்சிதான்.
அடுத்து அவர் சொன்னதாக வெளியாகியிருக்கும் செய்திதான் கிலியடிக்க வைத்திருக்கிறது. இன்னொரு படத்தில் நடிக்க இருக்கிறாராம்.. அதுவும் ஹீரோவாக.
சமீபத்தில் இவர் நடித்து வெளியான, “எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” படத்தைப் பார்த்து, “அட.. எப்படி இருந்த கவுண்டமணி இப்படி ஆயிட்டாரு! கன்னமெல்லாம் ஒட்டிப்போயி, விழி வெளியே வந்து.. பார்க்கவே கஷ்டமா இருக்கே. குரலும் கிழடுதட்டி போயிடுச்சு. (இவ்வளவு… இவ்வளவு… இவ்வளவு) வயசான காலத்துகல பேசாம வீட்டுல ஓய்வெடுக்கக்கூடாதா. இப்படி தேவையில்லாம நடிச்சு, தனக்கு இருக்கிற நல்ல பெயரை கெடுத்துக்கணுமா” என்றே பலர வருத்தப்பட்டார்கள்.
வதந்தி பரப்பியவர்களை தண்டிக்கிறேன் என்று  எல்லோரையும் மிரட்டலாமா.
கவுண்ட மணி சார்.. நீங்கள ஆரோக்யமா நீண்ட நாள் வாழணும். அதே போல உங்கள பழைய காமெடிகளை (மட்டும்) பார்த்து நாங்களும் சந்தோஷமா இருக்கணும்.
பழைய வாக்கியங்கள்தான். ஆனால் ஒரு படத்தில் நீங்கள் சொல்வதுதான் மனதில் பதிந்திருக்கிறது.
“வாழுங்கடா.. வழ வுடுங்கடா!”