22 ஆண்டுகளுக்கு இந்திய சினிமாவே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு பிரம்மாண்டமாகத் துவக்கப்பட்ட ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் துவக்குவது சம்பந்தமாக விரைவில் அறிவிக்கவிருக்கிறாராம் கமல். …

கடந்த 1997ம் ஆண்டு பிரிடிஷ் இளவரசி இரண்டாம் குவின் எலிஸபெத் குத்து விளக்கேற்றி தொடங்கப்பட்ட கமல்ஹாசனின் மருதநாயகம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய பெருமை சேர்க்கும் என எதிப்பார்த்திருந்த படம் பட்ஜெட் அதிகரித்ததால் கைவிடப்பட்டது.

ஏற்கனவே எடுத்த பகுதிகளை முதல் 30 நிமிடக் காட்சிகளாக அமைத்துவிட்டு அடுத்து 12 ஆண்டுகளுக்குப் பின்…என்று கதையை நகர்த்த முடிவு செய்துள்ளாராம்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம், மற்ற தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது. கமல்ஹாசன் தான் இப்படத்தை இயக்கப் போகிறார்.

விக்ரமை ஹீரோவாக வைத்து இந்த படத்தை மீண்டும் எடுக்க கமல் விரும்புவதாகவே தெரிகிறது.