தென் கொரிய கடல் அருகே நேற்று (2-11-2022) ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசியது வடகொரியா.

இதனைத் தொடர்ந்து ஜப்பான் மீது இன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசியிருக்கிறது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஜப்பானின் வடகிழக்கு பிராந்தியத்தை நோக்கி ஏவப்பட்ட இந்த ஏவுகணை ஜப்பான் நிலப்பரப்பைத் தாண்டி பசிபிக் கடலில் சென்று விழுந்தது.

வடகொரியாவின் இந்த தாக்குதல் குறித்து கண்காணிப்பு மையங்கள் உணர்ந்ததை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் முடு்க்கிவிடப்பட்டன.

மக்களை வீடுகளை விட்டு வெளியேற அவசர அழைப்பு விடு்கப்பட்டது, தொலைக்காட்சிகளில் வழக்கமான நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் ஜப்பானில் பதற்றம் நிலவியது.

வடகொரியாவின் இந்த அபாயகரமான ஏவுகணை சோதனை குறித்து தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளையில் உக்ரைன் மீதான போரில் ரஷ்ய படைகளுக்கு வடகொரியா ஆயுதம் வழங்கி உதவி செய்வதாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் வடகொரியா மீது இன்று குற்றம்சாட்டியுள்ளார்.

தென் கொரியா மற்றும் ஜப்பான் மீதான ஏவுகனை தாக்குதல் குறித்து வடகொரியா இதுவரை எந்த தகலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]