சென்னை: அறிவியல் பூர்வமான ஆய்வுகள் வந்தபிறகே கீழடி ஆய்வுகளை அங்கீகரிக்க முடியும்  என  மத்திய லாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார்.

கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த ஆய்வு முடிவுகளின் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் வந்தபிறகே அங்கீகரிக்க முடியும் என்று  சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார்.

கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்றும், போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பதாகவும் தமிழக சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்திய தொல்லியல் துறை சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகள் குறித்த ஆய்வறிக்கை தொல்லியல் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் சில திருத்தங்கள் கோரி ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பின.

இதற்குப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் இதற்கு ஏற்கனவே  தொல்லியல் துறை பதில் தெரிவித்திருந்தது.  அதில்,  கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட தயக்கம் காட்டுவதாகக் கூறுவது வெறும் கற்பனைக் கதையே என்றும், அறிக்கையில் திருத்தம் கேட்டது வழக்கமான நடைமுறைதான் எனவும் , ஒவ்வொரு தொல்லியல் ஆய்வுக்கும் அதிக நேரம், உழைப்பு, நிதி செலவிடப்படுவதால், அனைத்து ஆய்வு அறிக்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், இல்லையென்றால் ஆய்வின் நோக்கமே நிறைவேறாமல் போய்விடும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்,  சென்னை வந்துள்ளது  மத்திய கலாசாரத் துறை அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்த செய்தியாளர்களி, , கீழடி ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்கப் படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறிய மத்தியஅமைச்சர்,  கீழடி அகழ்வாய்வு குறித்த  அறிவியல் பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வந்தபிறகே அங்கீகரிக்க முடியும் என்றார். இந்த விஷயத்தில்,  இன்னும் அதிகமான அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், மத்தியஅரசு,  அயோத்தி ஆய்வை மட்டும் மத்திய அரசு உடனே அங்கீகரித்தது ஏன்? எப்படி? என்றும், தமிழகத்தின் தொன்மையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு தொடர்ந்து மறுக்கிறதே என்றும் வரலாற்றுப் பேராசிரியர்களும், தமிழக ஆய்வாளர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.