புதுடெல்லி:

பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட, மணிக்கு 180 கி.மீ வேகம் செல்லும் வந்தே பாரத் ரயில் கட்டணம், பயணிகளிடம் வரவேற்பில்லாததால் திடீரென குறைக்கப்பட்டது.


சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட ட்ரைன்18 எனப்படும் வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. ஏசி வசதி கொண்டது.
புதுடெல்லியில் இருந்து வாரணாசி வரை சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 180 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரயில், பின்னர் மணிக்கு 130 கி.மீ வேகத்திலேயே இயக்கப்பட்டது.

சேர் காரில் ரூ. 1,850 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது தற்போது 1,795-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
3,520-ஆக இருந்த எக்ஸ்க்யூட்டிவ் கிளாஸ் 3,470-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பயணிகளிடம் வரவேற்பு இல்லாததே இத்தகைய விலை குறைப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது,