பெங்களூரு:

க்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாளம் பெரும் சந்தித்த நிலையில், நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

நாடு முழுவதும் 17வது மக்களவைக்கான தேர்தல் முடிவடைந்து, மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் பதவி ஏற்றுள்ளது. 28 லோக்சபா தொகுதிகளில் 25 இடங்களை பாஜக கைப்பற்றியது.

இந்த நிலையில் லோக்சபா தேர்தல்முடிவடைந்த சில நாட்களிலேயே அங்கு உள்ளாட்சி தேர்தலும் நடைபெற்றது.  இதில், பாஜக பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது.  தனித்தனியே போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த மே மாதம்  29-ந் தேதி கர்நாடகத்தில் 20 மாவட்டங்களை சேர்ந்த  61 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1221 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சி 509 இடங்களையும், பிஜேபி 366 இடங்களிலும், ஜேடிஎஸ் 160 இடங்களை யும் கைப்பற்றி உள்ளது. மேலும் கம்யூனிஸ்டு 2 இடங்களையும், பிஎஸ்பி 3 இடங்களையும் கைப்பற்றி உள்ளது.

கர்நாடகாவில் 1361 உள்ளாட்சி வார்டுகள் உள்ள நிலையில் 1221 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல்கள் நடைபெற்றது.

இதில் அதிகபட்சமாக காங்கிரஸ் 509 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 366 வார்டுகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 174 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 160 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் தனித்தனியே போட்டியிட்டன. அப்படியிருந்தும் பாஜகவிட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

மொத்தத்தில் காங்கிரஸ் கட்சிஏறக்குறைய  42% இடங்களை வென்று, கர்நாடக மக்கள் காங்கிரசுடன் இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது  என்று மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்து உள்ளார்.