கொரோனா பரவலால் லாக்டவுனால் கடந்த 5 மாதமாக தமிழ் சினிமா படப் பிடிப்புகள் முடங்கி இருந்தது. படப் பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடத்தவும் டிவி சீரியல் படப்பிடிப்பு நடத்த வும் மட்டுமே அரசு அனுமதி வழங்கி இருந்தது.
ரஜினிகாந்தின் அண்ணாத்த, அஜீத்தின் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படங்கள் உள்ளிட்ட ஏராள மான படங்களின் படப்பிடிப்பு முடங்கி பாதியிலேயே நின்றது. மேலும் படப்பிடிப்பு நடக்காதால் பெப்ஸி தொழிலாளர்கள் 25 ஆயிரம் பேர் வேலை இல்லாமல் வருமானம் இன்றி பரிதவித்தனர். துணை நடிகர் நடிகைகளும் க‌ஷ்டத்தில் ஆழ்ந்தனர்.


இதையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப் பாளர்கள் நடப்பு சங்க தலைவர் பாரதி ராஜா அரசிடம் படப்பிடிப்பு நடத்த அனுமதி தர வேண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று முந்தினம் அரசு வெளியிட்ட அறிவிப்பில் 75 பேர்களுடன் படப் பிடிப்பு நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியது. இதையடுத்து படப் பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திண்டுக்கல்லில் ’சூனா பானா’ படப்பிடிப்பு நடந்தது. படப் பிடிப்பில் நடிகர்கள் அப்புக் குட்டி, சாம்ஸ் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துகொண்டனர். விரைவில் மற்ற படப்பிடிப்புகளும் தொடங்க உள்ளது.
படப்பிடிப்பு தொடங்கியதை அடுத்து தியேட்டர் திறப்புக்க அனுமதிக்க வேண்டும் என்று தியேட்டர் சங்கங்கள், இயக்குனர் பாரதிராஜா போன்றவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ள்னர்.