பெங்களூரு:
கர்நாடகா மாநிலத்தில் உள்ள லிங்காயாத் சமூகத்தினர் தனி மத அந்த்ஸ்து வழங்க வேண்டும் என்று கட ந்த சில வாரங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை தொடர்ந்து வொக்காலிகா சமூகத்தினரும் தனி மத அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்ப தொடங்கியுள்ளனர்.
இது குறித்து கர்நாடகா மாநில முன்னாள் பாஜ அமைச்சர் அசோக் கூறுகையில்,‘‘ வொக்காலிகா சமூகத்தை தனி மதமாக அங்கிகரிக்க வேண்டும். இந்துக்களோடு ஒப்பிடுகையில் அவர்கள் வேறுபட்ட சமூக மற்றும் மத கொள்கைகளை கொண்டுள்ளனர்.
ஜெயினிசம் தனி மத அந்தஸ்து பெற்றுள்ளது. லிங்காயாத் சமூக தனி அந்தஸ்து கேட்டுள்ளது. இ ந்நிலையில் வொக்காலிகா சமூகத்திற்கும் தனி மத அந்தஸ்து வழங்கி சிறுபான்மை மதமாக அறிவிக்க வேண்டும்’’ என்றார்.
இதே கருத்தை மதசார்பற்ற ஜனதா தள முன்னாள் அமைச்சர் சேலுவராயசுவாமியும் வலியுறுத்தியுள்ளார். இந்த கோரிக்கையை வலியுறுத்துவது தொடர்பாக மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஆதிசுஞ்சநகிரி மட போதகரும், வொக்காலிகா சமுதாய தலைவருமான நிர்மலானந்தா சுவாமிகள் தான் இறுதி முடிவு எடுப்பார் என்று இரு முன்னாள் அமைச்சர்களும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ‘தி நியூஸ் மினிட்’’ செய்தி நிறுவனம் சார்பில் போதகரை தொடர்பு கொண்டு கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறுகையில்,‘‘ இது தொடர்பாக உரிய நேரம் வரும் போது அறிவிப்பு வெளியிடப்படும். தற்போதுள்ள சூழ்நிலையில் இது குறித்த அறிவிப்பை வெளியிட இயலாது. நேரம் வரும் போது எனது முடிவை அறிவிப்பேன்’’ என்றார்.
வொக்காலிகா சமூகத்தை சேர்ந்தவர்கள் மாநிலத்தில் 15 முதல் 17 சதவீதம் பேர் வரை உள்ளனர். தெற்கு கர்நாடகா மாவட்டங்களான மாண்டியா, ஹசன், மைசூர், பெங்களூரு (புறநகர்), துமகுரு, சிக்கபல்லவுரா, கோலார், சிக்கமகலூரு ஆகிய பகுதிகளில் வசிக்கின்றனர். சித்ரதுர்கா, சிமோகா, தக்ஷினா கன்னடா, உ டுப்பி மாவட்டங்களிலும் சில பகுதிகளில் உள்ளனர். மாண்டியா மாவட்டத்தில் 50 சதவீத மக்கள் தொகை இந்த சமூகத்தினர் உள்ளனர்.
மதசார்பற்ற ஜனதா தளத்தில் உள்ள வொக்காலிகா வாக்கு வங்கியை உடைப்பதற்காக பாஜக.வினர் இந்த தனி மத அந்தஸ்து பிரச்சாரத்தை கையில் எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பாஜ தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடகா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை குறிப்பிட்டத் தகுந்ததாக கருதப்படுகிறது. மேலும், அமித்ஷா, நிர்மலானந்தா சுவாமியை சந்திக்கும் திட்டமும் உள்ளது.
‘‘கர்நாடகாவில் பாஜ வலுவடைவதற்கு முன்பு வொக்காலிகா பல அமைப்புகளாக பிரிந்து இருந்தனர். பாஜ வலுவடைந்தவுடன் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துவிட்டனர். லிங்காயாத் சமூகத்தையும் பாஜக தான் வழிநடத்துகிறது. வொகாலிகா சமூகத்தை மதசார்பற்ற ஜனதா தளம் வழிநடத்துகிறது.
லிங்காயாத் மற்றும் வொக்காலிகா சமூகத்தினர் அரசியலில் குறிப்பிட்ட இடத்தை தக்க வைத்துள்ளனர். வெ £க்காலிகாஸ் சமூகத்தை சேர்ந்த எஸ்.எம். கிருஷ்ணா பாஜக.வில் இணைந்துள்ளார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜ வெற்றி பெற வேண்டிய நிலை உள்ளது. வொக்காலிகா ஆதரவு மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு உள்ளது’’ என்று பாஜ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.