டில்லி:

இ.மெயில் தகவல் பரிமாற்றம் மூலம் வருமான வரித் துறைக்கு ரூ.977.54 கோடி தபால் செலவும் மிச்சமாகியுள்ளது.

வருமான வரித் துறையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இ.மெயில் தகவல் பரிமாற்ற முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் வரி செலுத்துவோருடனான தொடர்புகள் அனைத்தும் இ.மெயில் மூலமே நடந்தது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் 977.54 கோடி ரூபாய் தபால் செலவும் மிச்சமாகியுள்ளது.

கடந்த டிசம்பர் வரையிலான 2017&18ம் ஆண்டில் ரூ.212.27 கோடி மிச்சமாகியுள்ளது. இது 2013&14ம் ஆண்டில் இருந்த ரூ.98.45 கோடியை விட இரு மடங்கு அதிகமாகும். கடந்த ஆண்டை விட 20 சதவீதம் கூடுதலாக மிச்சமாகியுள்ளது.

2017&18ம் ஆண்டில் 14.15 கோடி இ.மெயில்கள் அனுப்பப்பட்டுள்ளது. 2016&17ம் ஆண்டில் 11.82 கோடி இ.மெயில்களும், 2013&14ம் ஆண்டில் 6.56 கோடி இ.மெயில்களும் அனுப்பப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காகிதம் இல்லாத செயல்பாடு திட்டத்தை வருமான வரித் துறை அலுவலகங்களில் அறிமுகம் செய்த பின்னர் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.