மும்பை

ணமதிப்பு குறைப்பு நடவடிக்கையால் லஞ்சம் வாங்குவது குறையும் என அரசு அறிவித்ததற்கு நேர் மாறாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று கவலை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, முதலிடு பற்றிய ஆலோசனைகள் அளிக்கவும்,  அவர்கள் சார்பில் முதலீடு செய்வதற்கும் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் ஒன்று யு எஸ் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் ஃபார்ம்.    இந்த நிறுவனம் இந்தியாவில் பண மதிப்பு குறைப்பு நடவடிக்கைக்குப் பின் லஞ்சம் வாங்குவது குறையவில்லை என கவலை தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் தெரிவித்த தகவலானது :

”பண மதிப்பு குறைப்புக்குப் பின் லஞ்சம் மிகவும் குறைந்து விடும் என இந்திய அரசு அறிவித்திருந்தது.   ஆனால் பணமாக லஞ்சம் வாங்குவது மட்டுமே குறைந்துள்ளது.   அதற்கு பதிலாக பரிசுப் பொருட்களாக வீடுகள், நிலம், வெளிநாட்டு உல்லாச பயணம் போன்ற இனங்களில் லஞ்சம் வாங்கப் படுகிறது,

இதனால் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு நிச்சயமாக இந்த வருடம் பெருமளவில் குறையும்.   லஞ்சம் தான் இந்தியாவில் முதலீடு செய்பவர்களை தடுக்கும் முதல் காரணி ஆகும்.   அதற்கடுத்தபடியாக இந்திய பொருளாதார மாற்றங்களும்,  அதன் விதிகளும் ஆகும்.   ஒரு நிறுவனம் நினைத்த மாத்திரத்தில் தனது தொழிலை வேறு நாட்டுக்கு மாற்றிக் கொள்ள முடிவதால் ஒரு ஸ்திரத் தன்மை இல்லாத நிலை உள்ளது.   அதனால் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய தயக்கம் ஏற்படுகிறது “ என கூறி உள்ளது.