சென்னை

நெடுஞ்சாலைகளை உள்ளூர் சாலைகள் ஆக்குவதில் தவறில்லை என்னும் உச்ச நீதிமன்ற உத்தரவினால் பல நெடுஞ்சாலைகள் உள்ளூர் சாலைகள் ஆக்கப்பட்டு டாஸ்மாக் மீண்டும் திறக்கப்படும் என தெரிகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள மூட வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க சுமார் 2000 க்கும் அதிகமான டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.   அவைகளை ஊருக்குள் அமைப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  ஊடகங்களும் பொதுமக்களுக்கே ஆதரவளிக்கின்றன.

குடிமகன்கள் மிகவும் பரிதவித்து வருகின்றனர்.  இதற்காக  நெடுஞ்சாலைகளை மாநிலச் சாலைகளாக மாற்றி அங்கு மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசுக்கு ஒரு எண்ணம் உள்ளது.

தற்போது உச்ச நீதி மன்றம் நெடுஞ்சாலைகளை உள்ளூர் சாலைகள் ஆக்குவதில் தவறில்லை என கருத்து தெரிவித்துள்ளது.   அது தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த ஒரு வரமாகவே கருதப்படுகிறது.  இந்த கருத்தை மேற்கோள் காட்டி விரைவில் நெடுஞ்சாலைகளை மாநில, உள்ளூர் சாலைகளாக பெயர் மாற்றி, டாஸ்மாக் கடைகளை முன்பிருந்தே இடத்திலேயே அரசு திறக்கக்கூடும் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த கருத்து எழுத்து பூர்வமாக வெளிவந்த உடன் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என தெரிகிறது