நியூடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை அது வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறதென சாடி வந்தனர். ஆனால், மராட்டிய சட்டசபைத் தேர்தலில் 28 அரசியல் வாரிசுகளை வேட்பாளர்களாகக் களமிறக்கியுள்ளது பாஜக.
முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸிருந்து பார்த்தால், அவர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், கங்காதர் ராவ், ஃபட்நாவிஸின் மகனாவார். அவ்வாறே முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர், முன்னாள் மராட்டிய மந்திரி என்று இப்படிப்பட்டவர்களின் வாரிசுகளே களத்தில் வேட்பாளராகியிருந்தனர்,
பாஜக போட்டியிட்ட 164 தொகுதிகளில் 20 சதவீத அளவில் அரசியல் வாரிசுகள் ஆக்கிரமித்திருந்தனர் என்றாலும் ஹரியானா தேர்தலில் 90 வேட்பாளர்களில் இரண்டு பேர் மட்டுமே அரசியல் வாரிசுகள் ஆவர்.
காங்கிரஸின் வாரிசு அரசியல் குறித்து 2013 இல் மோடி கடுமையாக சாடும்போது ராகுல் காந்தியை இளவரசராக காங்கிரஸ் கருதுகிறதென்றும், அதே வருடம் பீஹாரில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிர வாரிசு அரசியலைக் கைவிட்டால்தான் ராகுல் காந்தியை இளவரசர் என்று அழைப்பதை விடுவதாகக் கூறினார்.
ஆனால், அந்தக் குடும்பத்தை சாடுவது 2014 லிலும் மட்டுமின்றி 2019 ல், பாராளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது. இப்போதோ, பாஜக வை வாரிசு அரசியலின் கூடாரமென வர்ணிக்கும் அளவு அங்கும் அது தலை தூக்கியுள்ளது.