ஊட்டி: 46 நாட்களுக்கு பிறகு ஊட்டி மலைரெயில் இன்றுமுதல் மீண்டும் இயங்கத் தொடங்கி உள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால், மேட்டுப்பாளையம், ஊட்டி இடையே இயக்கப்பட்டு வந்த மலைரயில் சேவை நிறுத்தப்பட்டது. நவம்பர் 5 இரவு பெய்த கன மழையில், ரயில் பாதையில் பாறைகள் உருண்டு, போக்குவரத்தை தடை செய்தன.
இதனால், நவம்பர் 6ம் தேதி முதல் மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. அதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இடையிடையே மீண்டும் மழை பெய்ததால், மீட்புபணிகளிலும் தடை ஏற்பட்டது. இதையடுத்து, மழை குறைந்ததும் மீட்பு பணிகள் செய்யப்பட்டு நேற்று வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து சுமார் 47 நாட்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இன்றுமுதல் (22ந்தேதி) மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை உள்ளதால், வரும் 22ம் தேதி முதல் மலை ரயில் இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணியர், டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.