சென்னை

காங்கிரஸ் கட்சி 30 அண்டுகளுக்குப் பிறகு அதிக சதவிகித இடங்களில் வென்றுள்ளது.

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தற்போது மத்திய அரசில் இடம் பெறவில்லை எனினும் பல மாநிலங்களில் ஆளும் கட்சியாக உள்ளது.    வேளான் சட்டங்களை அமல் படுத்த பல மாநிலங்கள் ஒப்புக் கொண்ட போதிலும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் தைரியமாக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக அணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்று 25 இடங்களில் போட்டியிட்டது.  இதில் 18 இடங்களில் வெற்றி  பெற்றுள்ளது.  மேலும் கன்னியாகுமரி மக்களவைக்கு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் அந்த தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து தமிழக காங்கிரஸ் தனது டிவிட்டரில்,

“1991 ஆம் ஆண்டு  இந்திய தேசிய காங்கிரஸ் 65 இடங்களில் போட்டியிட்டு 60 இடங்களில் வெற்றி பெற்றது ( 92% வெற்றி சதவிகிதம்) 30 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி 72 % (18/25) தற்போதைய தேர்தலில் பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் மீண்டும் வெற்றிப் பாதையில்.

@கே எஸ் அழகிரி, @பீட்டர் அல்ஃபோன்ஸ், @வாழப்பாடி”

என பதிவிட்டுள்ளது.