வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானுக்கு இனிமேல் நிதி தர முடியாது என்று அறிவித்துள்ள உலக வங்கி ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வந்தநிதியை உடனே நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா முழு பாதுகாப்பு கொடுத்து வந்த வரையில், அங்கு தாலிபான்கள் பயங்கரவாதிகள் அடங்கி ஒடுங்கி இருந்தனர். ஆனால், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றதும், ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வாபஸ் பெறப்படும் என அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளை தொடங்கினார். இதனால், அங்கு மீண்டும் தாலிபான்கள் தலைதூக்கத் தொடங்கினார்.
இதைத்தொடர்ந்து, அங்கு தலிபான்களுக்கும், அரசுக்கும் இடையேயான மோதல் ஏற்பட்டது. முதல்கட்டமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணங்களைக் கைப்பற்றி வரும் தலிபான்கள் பைசாபாத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து, நாடு முழுவதையும் கைப்பற்றினர். இதனால் அதிபர் கர்சாய் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தஞ்சமடைந்தார்.
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. அங்கிருந்து தங்களது நாட்டு பிரஜைகளை அழைத்துச்செல்வதில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன. இதற்கிடையில், தாலிபான்களின் வெறியாட்டம் தொடங்கி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அமெரிக்க படைகள் முழுமையான இந்த மாத இறுதிக்குள் வெளியேற வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளன.
தாலிபான்களின் நடவடிக்கைக்கு ரஷ்யா உள்பட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதியை நிறுத்திக் கொள்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும் தலீபான்களால் ஆப்கன் பெண்கள் நிலை மேலும் மோசமாகும் என உலக வங்கி வருத்தம் தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் அதிரடி நடவடிக்கை காரணமாக, ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியுள்ள தாலிபான்கள் அரசுக்கு புதிய சங்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம், ஆப்கானிஸ்தானில் ஒரு அரசாங்கத்தை அங்கீகரிப்பது குறித்து “சர்வதேச சமூகத்தில் தெளிவின்மை” காரணமாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின். உலகளாவிய கடன் வழங்குநரின் வளங்களை அணுக முடியாது என்று அறிவித்தது.
அதுபோல, காபூலை தலிபான்கள் கைப்பற்றிய சில நாட்களில், ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கி அமெரிக்காவில் வைத்திருக்கும் எந்த சொத்துகளும் தாலிபான்களுக்கு கிடைக்காது என்று வெள்ளை மாளிகை கூறியது. இதன் காரணமாக தாலிபான்கள் அரசாங்கம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கும் நிலை உருவாகி உள்ளது.