பழமைவாதத்துக்கு பேர்போன அமைப்பு தாலிபான். இந்த கணிணி யுகத்திலும் ஆப்கானிஸ்தானை பலநூறு ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் வைத்திருப்பது அந்த இயக்கத்தின் பழமைவாத நடவடிக்கைகளே!

taliban

அப்படியிருக்கையில் துர்க்மெனிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியா வரை வரும் கேஸ் பைப்லைன் திட்டத்தை நாங்கள் தடை செய்ய மாட்டோம். இத்திட்டம் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு உதவுவதால் இந்த திட்டத்தை பாதுகாப்போம் என அதிரடியாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.
அதுமட்டுமன்றி ஆப்கான் அரசின் சாலை மற்றும் ரயில்வே உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் நாங்கள் பாதுகாப்போம் என்றும் அறிவித்துள்ளனர்.

tapi_project_map

துர்க்மெனிஸ்தான் – ஆப்கானிஸ்தான் -பாகிஸ்தான்-இந்தியா ஆகிய நாடுகளை உள்ளாடக்கிய TAPI (அனைத்து நாடுகளின் பெயரின் முதலெழுத்து) திட்டம் கிட்டதட்ட 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பிரம்மாண்ட திட்டமாகும். துர்க்மெனிஸ்தானின் கல்கைனிஷ் தளத்திலிருந்து ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியா வரை வரும் இந்த கேஸ் பைப்லைன் திட்டத்தால் ஆப்கானுக்கும் நிறைய பயன்கள் உண்டு.