சென்னை

சென்னை ஐஐடியில் ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த மாணவி பெகிஸ்தா ரகசியமாகக் கல்வி கற்று எம் டெக்  படித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர். பிறகு பெண்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அவர்கள் உயர்கல்வி பயிலத் தடை விதிக்கப்பட்டது.  இதனால் ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சர் இ போல் பகுதியைச் சேர்ந்த மாணவி பெகிஸ்தா கைருதீனின் உயர் கல்வி பாதிக்கப்பட்டது.

பெகிஸ்தா கடந்த 2021-ம் ஆண்டுக்கு முன்பு சென்னை ஐஐடி-ல் எம்டெக் கெமிக்கல் இன்ஜினீயரிங் படிப்பில் சேர விண்ணப்பித்தார். அதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைந்த அவருக்கு ஐஐடி-ல் சேர இடம் கிடைத்தும் ஆட்சி மாறியதால் சேர முடியவில்லை.

பெகிஸ்தாவின் நிலையை அறிந்த பேராசிரியர் ரங்கநாதன் ரங்கசுவாமி உதவிக்கரம் நீட்டினார்.  அவர்  சென்னை ஐஐடி நிர்வாகத்துடன் பேசி இணையம் வாயிலாக மாணவி பெகிஸ்தா கல்வி பயில ஏற்பாடு செய்தார். பெகிஸ்தா தற்போது வெற்றிகரமாக எம்டெக் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.