வாஷிங்டன்

ப்கானிஸ்தான் அரசு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினியால் இறப்பார்கள் என ஐநா சபை எச்சரித்துள்ளது.

 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதாக அறிவித்ததில் இருந்து அந்நாட்டைத் தாலிபான்கள் சிறிது சிறிதாகக் கைப்பற்றி தற்போது ஆட்சியை அமைத்துள்ளனர்.    தாலிபான்கள் ஆட்சி அமைத்ததால் அச்சம் அடைந்த ஆப்கான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடக்கினர். 

நாட்டில் தொழில், வர்த்தகம் என அனைத்தும் முடங்கியதால் கடும் பஞ்சம் ஏற்படத் தொடங்கி உள்ளதுகடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, உலக நாடுகளில் இருந்து வந்த பல நிதி பங்களிப்புகள் நின்றுபோனது.  இதனால் தற்போது அந்த நாடு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

இது குறித்து ஐநா சபையின் உலக உணவுத் திட்ட நிர்வாக இயக்குநர் டேவிட் பீஸ்லி, “ஆப்கானின் 39 மில்லியன் மக்களில் பாதிக்கு மேல் 22.8 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையில் சிக்கியுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக 14 மில்லியன் மக்கள் பட்டினியால் தவிக்கின்றனர்.  இந்த குழந்தைகள் இதனால் இறக்கப் போகிறார்கள்,

ஆப்கானில் விஷயங்கள் மிகவும் மோசமாகப் போகிறது. காபூல் யாரும் எதிர்பார்த்ததை விட வேகமாக காபூல் வீழ்ச்சியடைந்தது, அந்நாட்டுப் பொருளாதாரம் அதை விட வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நிர்வாகம் நிதிகளைத் திறந்து விட்டால்தான் மக்கள் உயிருடன் வாழ முடியும்” எனத் தெரிவித்தார்.

Afghanistan, Famine, Economic crises, children, may die, UN, cautioned,