சூடானில் ராணுவ புரட்சி… பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சிறைபிடிப்பு

Must read

 

வடகிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

ராணுவ புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவ தளபதி அப்தெல் பத்தாஹ் புர்ஹான் தொலைக்காட்சி மூலம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ராணுவத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மக்கள் போராடவேண்டும் என்று பிரதம மந்திரி அப்தல்லா ஹம்தோக் அழைப்பு விடுத்தையடுத்து வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சூடான் பிரதம மந்திரி அப்தல்லா ஹம்தோக் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவரை ரகசிய இடத்தில் அடைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சூடான் பிரதம மந்திரி அப்தல்லா ஹம்தோக்

அரசியல் கட்சியினரிடையே நடைபெற்று வரும் மோதலை தடுப்பதற்கும் 2023 ம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறும் வகையில் ராணுவத்தினர் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்திருப்பதாக ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

சூடானில் ஏற்பட்டிருக்கும் இந்த ராணுவ புரட்சிக்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

More articles

Latest article