சென்னை:
சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், அடையாறு கிரின்வேஸ் சாலையில் உள்ள செயல்பட்டு வரும் பழமையான ஆந்திர மகிளா சபா மருத்துவமனை மூடப்பட்டு உள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே சில மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சமீபத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சைமன் கொரோனாவால் பலியான சம்பவமும் நடைபெற்றது.
இந்த நிலையில், ஆந்திர மகிளா சபா மருத்துவமனை எனப்படும் துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மருத்துவமனை மூடப்பட்டு இருப்பதாக நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
Patrikai.com official YouTube Channel