டெல்லி

ழக்கறிஞர் எஸ் ஆர் இளங்கோ செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக தடை இல்லை எனக் கூறியுள்ளார்.

.

தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜி ஜாமீன் வழங்கக் கோரி மேல் முறையீடு செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்தது. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன், செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சற்று நேரத்தில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியே வர உள்ளார்.

வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உச்சநீதிமன்ற நிபந்தனைகள் குறித்து ,

”ரூ.25 லட்சத்திற்கு 2 நபர்கள் ஜாமின் கொடுக்க வேண்டும்; ஒவ்வொரு திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும்; குற்றவியல் நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்; சாட்சிகளை கலைக்க கூடாது ஆகிய நிபந்தனைகளை விதித்துள்ளது. எனவே மீண்டும் செந்தில் பாலாஜி அமைச்சராக எந்த தடையும் இல்லை”

என்றார்.