சென்னை:
ஹெலிகாப்டர் விபத்து காரணமாக அதிமுக சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது.

திமுக அரசு மக்கள்பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அதிமுக, இதனை கண்டித்து டிசம்பர் 9ம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது.

இதனிடையே, நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், அவரது குடும்பத்தினர் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பெரும்பாலானோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். பிபின் ராவத் நிலை குறித்து எவ்வித தகவலும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திமுக அரசை கண்டித்து நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்வதாக அதிமுக அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.